உங்க ஜாதகத்தில் இப்படி உள்ளதா? திருமணத்தில் தடை வருமாம்

Report Print Printha in ஜோதிடம்
366Shares
366Shares
lankasrimarket.com

திருமணம் செய்வதில் சிலருக்கு தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும். அதற்கு அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எனவே ஒருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்தால் திருமணத் தடைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்.

திருமண தாமதமாகும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?

  • ஜாதகத்தில் குடும்பஸ்தானம் என்று சொல்லக்கூடிய இரண்டாம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகங்கள் அமரும் போது ஏற்படுகிறது. களத்திர ஸ்தானாதிபதி எனும் 7க்குரிய நீச்சம் பெற்றால் திருமணம் அமைய கால தாமதம் ஏற்படும்.

  • 7-ல் நீச்சம் அல்லது வக்கிரம் பெற்ற கிரகம் இருந்தாலும் திருமணம் அமைய தடை ஏற்படும். களத்திரக்காரகன் சுக்கிரன் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து அசுபர் பார்வை பெற்றால் திருமணம் தாமதமாகும்.

  • 7-ம் பாவத்திற்கோ அல்லது 7-ம் அதிபதிக்கோ சனி சேர்க்கை அல்லது பார்வை கிட்டினால் இல்லறம் அமையத் தடை ஏற்படுகிறது. 7-ம் அதிபதியோடு ராகு-கேது சேர்க்கை ஏற்பட்டால் திருமணம் தாமதமாகிறது.

  • சுக்கிரன் நீச்சம் பெற்று சனி செவ்வாய் பார்வை சேர்க்கை பெற்றாலும், சனி, செவ்வாய் 7-ல் இருந்து சந்திரனும் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் மறைவு பெற்றாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஆகிறது.

  • 7-ம் அதிபதி சூரியனோடு சேர்ந்து அஸ்தமனம் பெற்றாலும் திருமணத் தடைகள் உண்டாகிறது. 7-ம் அதிபதி நவாம்ச லக்னத்திற்கு 12-ல் இருந்தாலும் திருமணம் தாமதமாகும்.

  • குரு, சுக்கிரன், சூரியன் இவர்களில் ஒருவர் 1-ல் இருந்து சனி, 12-ல் இருப்பதும் திருமணம் நடைபெற ஒரு காரணமாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்