உங்களை பற்றி ஜாதகம் கூறும் 5 ரகசியங்கள்

Report Print Printha in ஜோதிடம்
937Shares
937Shares
Seylon Bank Promotion

ஜாதகம் என்பது திருமண பொருத்தம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதை வைத்து ஒருவரின் எதிர்காலம் மற்றும் குணநலன்களை தெரிந்துக் கொள்ளவும் உதவுகிறது.

தொழில்

ஒருவரின் ஜாதகத்தை வைத்தே அவர்களுக்கு எந்த தொழில் நன்கு வரும் என்றும், பிறக்கும் நேரத்தின் நட்சத்திரங்களில் நிலைப்பாட்டை வைத்து ஒருவரின் வலிமை, வலுவின்மை எப்படி இருக்கும் என்று கூறலாம்.

படைப்பாற்றல் மற்றும் செயலாற்றல்

ஜாதகத்தை வைத்து, நீங்கள் படைப்பாற்றல் அல்லது செயலாற்றல் போன்ற எந்த துறையில் திறன் வாய்ந்து செயல்படுவீர்கள் என்றும் கூற முடியும்.

மேலும் ஒருவருடைய வலிமை மட்டுமின்றி, அவர்களின் வலுவின்மையை பற்றியும் ஜாதகத்தை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்.

ஆளுமை மற்றும் குணநலன்கள்

ஒருவரது நட்சத்திரம் மற்றும் ஜாதகத்தை வைத்து அவர்களின் ஆளுமை திறன் மற்றும் குணநலம் எவ்வாறு இருக்கும் என்பதை கண்டறிந்து கூற முடியும்.

சொல் மற்றும் சுய புத்தி

புத்தியை பொருத்தவரை மூன்று வகையினர் உள்ளனர். அவை, சொல் புத்தி, சுய புத்தி, இரண்டுமே இல்லாமை. இதில், நீங்கள் எப்படி பட்டவர்கள் என்பதை தெளிவாக கண்டறிய முடியும்.

வாழ்க்கையின் துயரம்

ஒருவரின் ஜாதகத்தை வைத்து, அவர்கள் வாழ்க்கையில் எந்த கட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அந்த துன்பங்கள் நடக்காமல் தடுக்க முன் ஜாக்கிரதையாக இருப்பதற்கு ஜாதகம் பெரிதும் உதவுகிறது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்