உங்க ராசியின் உண்மையான ப்ளஸ்: தெரிந்துக் கொள்ளுங்க

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
Promotion

ஒருவரின் ராசியை வைத்து அவர்களிடம் உள்ள உண்மையான பலம் என்னவென்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

மேஷம்

மேஷம் ராசி சக்தி வாய்ந்த, தன்னுறுதியுள்ள, ஆற்றலுள்ள மற்றும் பெரியளவில் சுதந்திரமுள்ள வகையில் செயல்பட செய்யும்.

இவர்கள் ஆரம்பத்தி இருந்தே அனைத்து பொறுப்புகளையும் எடுத்து, தலைமை வகிக்க விரும்புவார்கள். இந்த குணம் அவர்களை தைரியமுள்ளவர்களாகவும், சுதந்திரமானவர்களாகவும் மாற்றும்.

அதனால் வாழ்க்கையில் தாங்கள் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலை கொள்வதில்லை. புதுமை விரும்பியாக இருக்க விரும்பும் இவர்கள், அவர்கள் செய்யும் எதிலும் முதல் ஆளாக இருக்கவும் விரும்புவார்கள்.

ரிஷபம்

ரிஷபம் ராசிக்காரர்கள் மிகவும் அடக்கமான, நம்பகத்தன்மை மற்றும் பொறுமை உள்ள கடின உழைப்பாளியாக இருப்பார்கள்.

இவர்களுக்கு அருமையான நண்பர்கள், காதலர்கள் மற்றும் உடல் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டிருப்பார்கள்.

சிறந்த அறிவுரைகளை வழங்கும் இவர்கள் மற்றவர்கள் கூறுவதை எப்போதும் பொறுமையாக கேட்பார்கள். அதேப்போல் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு வந்து நிற்பார்கள். மற்றவர்களை எப்போதும் கைவிட மாட்டார்கள்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்கள் வார்த்தைகளை பயன்படுத்துவதில் அவர்களுக்கென்று ஒரு வழி இருக்கும். கூடுதல் நகைச்சுவை உணர்வுடன், ஆற்றல் திறன் மிக்கவராக, வாழ்க்கையின் மீது ஆர்வமிக்கவராக இருப்பார்கள்.

அதேப்போல் பெற்ற அறிவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். புதிய ஆட்களை சந்திக்க விரும்பும் இவர்கள் அனைவருடனும் சுலபமாக பழகுவார்கள்.

கடகம்

கடகம் ராசிக்காரர்கள் தங்கள் மனதினால் யோசிப்பார்கள். அதனால் அவர்கள் விசுவாசம், பாதுகாப்பு, அக்கறை, வரவேற்கும் பண்பு ஆகிய அனைத்து குணங்களையும் கொண்அவர்கள்.

இயற்கையாகவே ஊட்டமளிப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் கையில் எடுக்கும் எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் கடின உழைப்பையும், முயற்சியையும் போடுவார்கள். மேலும் தங்கள் நண்பர்களுக்கு உதவி செய்வதில் இருந்து அவர்கள் பின் வாங்க மாட்டார்கள்.

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் காட்டின் ராஜாவான இவர்கள் மனதளவில் மென்மையானவர்களாக இருப்பார்கள். இவர்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால் நம்பிக்கை, லட்சியம், நற்பண்பு, விசுவாசம் மற்றும் ஊக்குவிக்கும் பண்பு என சிலவற்றை சொல்லலாம்.

நண்பர்களாக, உடன் பணிபுரிபவர்களாக, வழிகாட்டல் தேவைப்படும் அனைவருக்கும் இவர்கள் எப்போதும் உதவியாக இருப்பார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் காரியத்தை சிறப்பாக செய்ய அனைவரையும் ஊக்கப்படுத்துவார்கள். ஆதரவளிக்கும் குணத்தை கொண்ட இவர்கள் இயற்கையாகவே நல்லவர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் முடிவெடுக்க முடியாதவர்கள் என்பதால் பல நேரங்களில் அவர்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றனர். ஆனால் பிரகாசமான பக்கத்தை பார்க்கும் போது, குறிப்பிட்ட சில விஷயத்தைப் பற்றி அவர்கள் சமாதானமாகாத உண்மையை வெளிக்காட்டுகிறது.

பகுப்பாய்வுடன் இருக்கும் இவர்கள், ஒரு விடயத்தின் ஆணி வேர் வரை செல்வார்கள். அவர்களின் கூர்நோக்குகள் மிக ஆழமாக இருப்பதால், அவர்கள் எப்போதுமே நம்பகமான தகவலையே அளிப்பார்கள்.

அதனை பறைசாற்றும் வகையில் அவர்கள் ஆராய்ச்சி செய்திருப்பார்கள். மேலும் அதனை துல்லியமாகவும் வைத்திருப்பார்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் அமைதியை விரும்புவார்கள். அனைவரும் சௌகரியமாக, நன்றாக ஒத்துப்போகிறார்களாக என்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள்.

அதற்காக உபசரணையுள்ள சூழ்நிலையை உருவாக்குவார்கள். இயற்கையாகவே இராஜதந்திரத்துடன் இருக்கும் இவர்கள், எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி, சுலபமாக ஒன்றி, நண்பர்களைப் பெற்று விடுவார்கள்.

உயர்ந்த கொள்கைகள், வாழ்க்கையில் லேசான விடயங்களுக்கு கூட சிறந்த சுவையைக் கொண்டிருக்கும் இவர்கள் வசீகரமானவர்கள். அனைவரையும் கனிவுடன் வரவேற்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்கள் கூர்ந்து நோக்கக்கூடியவர்கள். ஒருவரைப் புகழ்ந்து, மோசம் செய்து தகவலை பெறக்கூடிய வல்லமையை கொண்டவர்கள். ஆழமான உள்ளுணர்வுடன், எந்த ஒரு விளக்கமும் இன்றி, ஒரு சூழ்நிலை அல்லது பிரச்சனையை அவர்கள் சுலபமாக புரிந்து கொள்வார்கள்.

சக்தி வாய்ந்தவர்களான இவர்கள், கச்சிதமாக எந்த ஒரு பங்கையும் செயல்படுத்தலாம். சமயோஜித புத்தியுள்ள இவர்கள் தங்கள் வேலையை எப்படியும் வாங்கி விடுவார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மிகுந்த நம்பிக்கை மிகுந்தவர்கள். எப்போதுமே புதிய துணியகரமான செயல்களைத் தேடி செல்வார்கள். தங்களின் சுதந்திரம் மற்றும் சார்பற்ற தன்மையை அவர்கள் மதிப்பார்கள்.

அதேப்போல் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட இடம் தேவை என்பதை அவர்கள் புரிந்து வைத்திருப்பார்கள். இவர்களின் நம்பிக்கை குணம், புதிய அனுபவங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைத் தேடச் செய்யும்..

மகரம்

மகரம் ராசிக்காரர்கள் கடின உழைப்பாளி. தங்களின் வேலை மண்டலத்தில் வைராக்கியம் மிக்கவர்களாகவும், தலைமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

தாங்கள் செய்வதை திறம்பட செய்யும் அவர்கள், தோல்விகளுக்கான பொறுப்பை எடுத்துக் கொள்ள பயப்பட மாட்டார்கள். ஒரு பிரச்சனைக்கு பொறுப்பெடுத்து அதனை தீர்க்க முற்படுவார்கள்.

நண்பர்கள் மற்றும் குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கும் இவர்கள், இயற்கையாகவே சமயோஜித மற்றும் நடைமுறை புத்தியுள்ளவர்கள்.

கும்பம்

கும்பம் ராசிக்காரர்கள் பல்வேறு விடயங்களில் ஒரே நேரத்தில் ஈடுபட்டு மகிழ்வதை விரும்புவார்கள். நீங்கள் ஏதேனும் புதிதாக பரிந்துரைத்தால், அதனை உடனடியாக எடுத்துக் கொள்வார்கள்.

நகைச்சுவை உணர்வு மற்றும் தகவமைப்பு பண்புடைய இவர்கள். மற்றவர்களின் விடயத்தில் தலையிடுவதை இவர்கள் வெறுப்பார்கள்.

இவர்கள் வாழ்க்கையை புத்திசாலித்தனமாக அணுகும் திறமை கொண்டவர்கள். எதையும் எப்போதும் புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பதால் இவர்களின் யோசனைகள் என்றுமே அசலான ஒன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் அதிக உணர்சியுடையவர்கள். தங்களைச் சுற்றியுள்ள சந்தோஷம் மற்றும் சோகத்தை வைத்தே அனைத்தையும் புரிந்து கொள்வார்கள். மற்றவர்களின் உணர்வுகளை அனுதாபத்தோடு பார்க்கும் இவர்களின் நண்பர்கள் சோகமாக இருந்தால், இவர்களும் சோகமாக இருக்கும் இரக்க குணம் கொண்டவர்கள்.

இவர்கள் எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்ப நடப்பதால், அனைவரிடமும் சுலபமாக பழகும் குணத்தை கொண்டவராக திகழ்வார்கள்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்