உங்க உள்ளங்கை ரேகையில் இந்த அமைப்புகள் உள்ளதா?

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஒருவரின் உள்ளங்கையில் உள்ள ரேகையை பொறுத்து அவர்களின் வாழ்க்கையில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

சூரிய ரேகை

ஒருவரின் உள்ளங்கையின் நுனியில் இருந்து தொடங்கும் சூரிய ரேகை புதன் மேட்டின் கீழ் உள்ளது. இந்த ரேகையில் முக்கோண உருவாக்கம் இருந்தால், அது ஒருவரின் நடுத்தர வயதில் ஏற்படக் கூடிய புகழை குறிக்கும்.

advertisement

மேலும் இந்த சூரிய ரேகையை வைத்து ஒருவரின் ஆயுட்காலம் மற்றும் முக்கோணத்தின் தோரணையை வைத்து எந்த வயதில் அவர்கள் புகழை அடைவார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

உள்ளங்கையின் மறுபுறம் எதிர்மறையான அடையாளங்கள் அல்லது சின்னங்கள் இருந்தால், அது ஒருவர் தன் வாழ்நாளில் சந்திக்கும் பேரதிர்ச்சி, பிரிவு, வலி, உடல்நல பிரச்சனைகள் மற்றும் இதர கஷ்டங்களைக் குறிக்கும்.

ரேகையில் முறிவுகள்

உள்ளங்கையின் முக்கிய ரேகைகள் மற்றும் சிறிய ரேகைகளில் முறிவுகள் இருந்தால், அந்த ரேகைகள் எங்கே இருக்கிறது? முறிவுகள் எங்கே தோன்றுகிறது? என்பதன் அடிப்படையை வைத்து ஒருவரின் வாழ்க்கையில் உள்ள நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை தெரிந்துக் கொள்ளலாம்.

கட்டை விரலை நோக்கிய ரேகையில் இந்த முறிவு தென்பட்டால், ஒருவரின் தொழில் ரீதியான வாழ்க்கையில் புதிய திருப்பத்தை குறிக்கும்.

இந்த முறிவு மேல்நோக்கு திசையில், கையின் நுனியை நோக்கி இருந்தால், அது திட்டமிடாத மற்றும் எதிர்பாராத பயணத்தை குறிக்கும்.

ரேகையில் சங்கிலி அமைப்பு

ஒருவர் தன் உள்ளங்கையில் சங்கிலிகள் போன்ற அடையாளங்களைக் கொண்டிருந்தால், அவர்கள் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இது குறிக்கும்.

இந்த சங்கிலி அடையாளங்கள் ஒருவரின் காதல் வாழ்க்கை அனுபவங்களையும் குறிக்கும். இந்த அடையாளங்கள் ஒரு நபரின் உடல்நல பிரச்சனைகள் மற்றும் முடிவெடுக்க முடியாத குணங்களைக் குறிக்கும்.

மேலும் இந்த சங்கிலி அடையாளம் எந்தளவிற்கு நீளமாக உள்ளதோ அதற்கேற்ப பிரச்சனைகளும் நீடிக்கும்.

ரேகையில் சிலுவை அமைப்பு

ஒரு நபரின் உள்ளங்கையில் காணப்படும் சிலுவை அமைப்பு, அவரின் விதியை கூறும். அதாவது ஒரு நபரின் நீண்ட காலமாக நீடிக்கக்கூடிய பிரச்சனைகளை அது குறிக்கும்.

ஒருவரின் வாழ்க்கையில் முக்கிய எழுச்சிகளின் உருவமைப்பாக இந்த சிலுவை அமைப்பு கருதப்படுகிறது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்