புரட்டாசி மாதத்தில் பிறந்தவரா? உங்க வாழ்க்கையின் அதிர்ஷ்டங்கள் இதோ

Report Print Printha in ஜோதிடம்
1898Shares
1898Shares
lankasrimarket.com

புரட்டாசி மாதப் பிறப்பு என்பது வித்தை, அறிவு, கணிதம் ஆகிய மூன்றுக்கும் உரிய புதனின் உச்ச மனையாகிய கன்னி ராசியில் சூரியன் உட்புகும் நாளாகும்.

பொதுவான குணநலன்கள்

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் அறிவு, ஆற்றல், விவேகம், சமயோசித புத்தி, யுக்தி கொண்டவர்கள். எதையும் ஆழ்ந்து சிந்தித்து மிக துரிதமாகக் கற்றுக் கொள்ளக் கூடியவர்கள்.

இவர்கள் தனக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களை பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருப்பார்கள். மேலும் அரிய, பெரிய நூல்கள், விளக்கங்கள், தத்துவங்கள் போன்று அனைத்தையுமே அறிந்து வைத்திருப்பார்கள்.

வாதம், பிடிவாதம் செய்வதில் ஈடு இணையற்றவர்கள். இவர்களிடம் ஒளிவுமறைவு இருக்காது.

இவர்கள் கற்பூர புத்திக்காரர்கள். ஒரு விடயத்தை சட்டென்று புரிந்து கிரகித்திக் கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள். இடம், பொருள், சூழ்நிலை, சந்தர்ப்பம் அறிந்து காய் நகர்த்தி வெற்றி காண்பார்கள்.

இவர்களின் முகபாவங்களை பார்த்து இவர்களுடைய மனதை அறிவது மிக கடினம். ஆனால் இவர்கள் மற்றவர்களின் எண்ண ஓட்டங்களை சுலபமாகப் புரிந்துக் கொள்வார்கள்.

பழகுவதில் இனிமையான இவர்கள் பிறர் மனம் புண்படாத வகையில் நடந்து கொள்வார்கள். அதேநேரத்தில் அதிக கௌரவம் பார்க்கக்கூடியவர்கள்.

குடும்பம்

குடும்பத்தார், உற்றார், உறவினர் என்று அனைவரையும் அனுசரித்துப் போவார்கள். கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றுவார்கள்.

குரு, சுக்கிரன் சாதகமாக இருக்க பிறந்தவர் என்பதால், இவர்கள் நல்ல பாக்கியசாலிகள். கொடுக்கல் வாங்கலில் நேர்மை, நியாயம் இருக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று கூற மாட்டார்கள்.

இவர்கள் பெண்கள் மூலம் அதிக ஆதாயம் அடைவார்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவார்கள். இவர்களிடம் பணம் எப்பொழுதும் சேமிப்பில் இருந்துக் கொண்டே இருக்கும்.

முக்கிய விடயங்களை தங்களின் குடும்பத்தாருடன் கலந்து பேசியே முடிவு செய்வார்கள்.

வாழ்க்கை

இவர்கள் எதிலும் தீர்க்கமாகவும், தெளிவாகவும், முடிவு எடுப்பார்கள். காரியம் பெரியதா, வீரியம் பெரியதா என்று வரும்போது காரியத்தில் கண்ணாக இருந்து சாதித்துக் காட்டுவார்கள்.

மனக்குழப்பங்கள், பிரச்னைகளை குடும்பத்தினர் மற்றும் அடுத்தவரிடம் வெளிக்காட்ட மாட்டார்கள். இவர்களின் நேர்மையான அணுகுமுறை பலருக்கு ஒத்துவராமல் போக, மனக்கசப்பு ஏற்படலாம்.

இவர்களுக்கு செவ்வாய் பலமாக இருந்தால் ராணுவம், காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை போன்றவற்றில் முக்கிய பொறுப்பு வகிப்பார்கள்.

சொத்து சுகம்

பூர்வீக சொத்துகள், மாமன் வகையில் அனுகூலம், உயில் சொத்து அனுபவிக்கும் பாக்கியம், மனைவி வகையில் செல்வம் என்று சொத்துக்கள் சேரும்.

அனுபவ அறிவும், படிப்பறிவும் கைகொடுக்கும். உயர் பதவிகள் வகிப்பதாலும், அதிகார மையத் தொடர்பாலும் சொத்து குவியும்.

சந்திரன் சாதகமாக இருக்கும் பட்சத்தில் தாயார், சகோதரி போன்றவர்களிடமிருந்து தானமாக சொத்து கிடைக்கும்.

நோய்

இவர்கள் சிந்தனை சக்தி மிகுந்தவர்கள், மூளைக்கு அதிக உழைப்பைத் தருவதால் அடிக்கடி ஒற்றைத் தலைவலி, டென்ஷன், நரம்புத் தளர்ச்சி, பார்வைக் கோளாறு மற்றும் ஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகள் மூலம் அதிகம் பாதிப்படைய வாய்ப்புகள் உள்ளது.

எனவே இவர்கள் நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இவர்களுக்கு இளம் வயதிலேயே வருவதற்கு வாய்ப்புள்ளது.

குழந்தைகள்

பிள்ளைகளால் பெருமை அடையும் பாக்கியம் உள்ளவர்கள். இவர்களின் வளர்ப்புமுறை காரணமாக குடும்பத்திற்கு உதவுகின்ற வகையில் புத்திரர்கள் அமைவார்கள்.

குரு, சனி பலமாக உள்ளவர்களுக்கு பிள்ளைகளால் ஏற்றம் உண்டு. வயோதிக காலத்தில் இவர்களை பாசமாக தாங்கிப் பிடிப்பார்கள்.

எதிர்காலம்

இவர்களின் வாழ்க்கை திட்டமிட்ட வாழ்க்கை என்பதால் எந்த விடயத்தையும் பலமுறை சிந்தித்த பின்பே செயலில் இறங்குவார்கள்.

அவசிய, அவசர தேவைக்கு கடன் வாங்க நேர்ந்தால் அதை எப்படியாவது உரிய காலத்தில் திருப்பிக் கொடுப்பதில் குறியாக இருப்பார்கள்.

இவர்களுக்கு நேர்முக எதிரிகள் இருக்க முடியாது. மறைமுக எதிர்ப்புக்கள் இருந்தாலும் பெரிய சங்கடங்கள் வர வாய்ப்பில்லை.

அதற்கு காரணம் சொந்தபந்தம், மற்றும் பொது விடயங்கள் போன்ற எந்த பிரச்னைகளிலும் அதிகம் மூக்கை நுழைக்காமல் நடந்து கொள்வார்கள்.

மனைவி

இயற்கையை விரும்பும் இவர்கள், எழில் கொஞ்சும் இடங்கள், மலைகள், நீர் வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செல்ல பிரியமாக இருப்பார்கள்.

கலை, கலாச்சாரம், நாகரிகம், சிற்பங்கள், பழமையான ஸ்தலங்களை பார்ப்பதில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள்.

விட்டுக்கொடுக்கும் தன்மை, நகைச்சுவை உணர்வு காரணமாக நண்பர்கள், கூட்டாளிகள் இவர்களுக்கு சாதகமாக இருப்பார்கள்.

குரு, சுக்கிரன் சாதகமாக அமைந்தால், இனிய இணக்கமான இல்லறம் அமையும். மதியூகமும், நற்பண்புகளும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் வாழ்க்கைத் துணைவியாக அமைவார்.

பெரும்பாலானோர்க்கு மனைவி வந்த பின்பே யோகம் வரும். மனைவி மூலம் பல யோக, பாக்கியங்களை அனுபவிப்பார்கள்.

தொழில்

வாழ்வாதாரம், தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் பெரும் வெற்றியாளர்களாகத் திகழ்வார்கள்.

இவர்களுக்கு கடினமான வேலைகள் உள்ள தொழில் அமைப்பு இருக்காது. மூளைக்கு அதிக உழைப்பு தரக்கூடிய பணியே அமையும்.

சாமர்த்தியப் பேச்சால் தொழில் செய்யும் தரகர்கள், கமிஷன் ஏஜெண்டுகளாக இருப்பார்கள். எத்துறையில் இருந்தாலும் அத்துறையில் வித்தகர்களாக இருப்பார்கள்.

துணிக்கடைகள், சூப்பர் மார்க்கெட், தங்கம், வெள்ளி வியாபாரம், நவநாகரிக பொருட்கள், ஏற்றுமதி, இறக்குமதி என்று பல்வேறு துறைகளில் கால்பதித்து பெரும் புகழ், செல்வாக்கு கிடைக்கப் பெறுவார்கள்.

இயல், இசை, நாடகம் போன்ற கலைத்துறைகளில் முத்திரை பதிப்பார்கள். நிதி, நீதித்துறையில் பணியாற்றும் அம்சமும் இவர்களுக்கு உள்ளது.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்