உங்கள் கையில் சுக்கிரன், செவ்வாய் மேடு எப்படி இருக்கு? பலன்கள் இவைதான்

Report Print Printha in ஜோதிடம்
589Shares
589Shares
lankasrimarket.com

கட்டை விரலின் அடி பாகத்தில் அமைந்திருக்கும் மேடான பகுதி தான் சுக்கிரன் மேடு ஆகும். இந்த சுக்கிரன் மேடு ரேகை உங்களுக்கு நன்றாக இருந்தால், சொத்து சேர்க்கை மற்றும் வாழ்க்கை நன்றாக அமையும்.

சுக்கிர மேடு அமைப்பின் பலன்கள்?

கையில் சுக்கிர மேடு உப்பலாக இருந்து, அதில் அதிக கோடுகளும், குறுக்கு கோடுகளும் இல்லாமல் இருந்தால் சுக்கிரன் நன்றாக இருப்பதாக பொருள். அதனால் வாழ்க்கை நன்றாக அமையும்.

குறுக்கும் நெடுக்கும் கோடுகள்,புள்ளிகளுடன் வற்றலாக இருந்தால் சுக்கிரன் வலுவில்லை, சொத்துக்களில் வில்லங்கம்,வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் உண்டாகும் என்று அர்த்தம்.

செவ்வாய் மேடு அமைப்பின் பலன்கள்?

சுண்டு விரலுக்கு நேர் கீழே சந்திர மேட்டுக்கு மேலே இருப்பது செவ்வாய் மேடு ஆகும்.

செவ்வாய் மேடு நிலம், மனை ஆகியவற்றிற்கு அதிபதி ஆகும். எனவே பூமி யோகம் பெற்றவர்களின் கையில் செவ்வாய் மேடு பலமாக இருக்கும்.

செவ்வாய் மற்றும் சுக்கிர மேடு நன்கு அமைந்து விதி ரேகை, சூரிய ரேகை ஆகிய இரண்டும் நன்கு அமைந்து ஆயுள் ரேகையில் மேல்நோக்கிய கிளை ரேகை காணப்பட்டால், அவர்களுக்கு வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் அமையும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்