உங்க ஜென்ம நட்சத்திரம் அன்று இதை செய்து விடாதீர்கள்

Report Print Printha in ஜோதிடம்
488Shares
488Shares
lankasrimarket.com

ஜோதிட சாஸ்திரமானது ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத காரியங்கள் என்று வரையறுத்துள்ளது.

ஜென்ம நட்சத்திரம் அன்று செய்யக் கூடியவை?
  • புதிதாக கல்வி கற்றல் மற்றும் கற்பிக்கலாம்.
  • உயர் பதவி ஏற்கலாம்.
  • அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கலாம்.
  • பத்திரம் பதிவு செய்யலாம்.
  • அன்னதானம் மற்றும் தர்ம காரியங்கள் செய்யலாம்.
  • யாகங்கள் செய்தல் மற்றும் கிரஹப்பிரவேசம் செய்யலாம்.
செய்யக் கூடாதவை?
  • நோயாளிகள் முதன்முதலாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • தம்பதியருக்கு திருமணம் செய்யக் கூடாது.
  • திருமணம் முடிந்த பெண்ணுக்கு சீமந்தம் செய்யக் கூடாது.
  • தம்பதிகள் சாந்தி மூகூர்த்தம் நடத்தக் கூடாது.

ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திரம் அன்று என்னென்ன சுப காரியங்களை செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

அசுவினி

அசுவினி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் திருமணம், புதுமனை கல்வி, பதவி, தானியம், ஆபரணம் மற்றும் வாகனம் வாங்க, மாங்கல்யம், சாந்தி முகூர்த்தம், வெளிநாடு செல்ல போன்ற சுப காரியங்களை செய்ய மிகவும் உகந்தவை ஆகும்.

பரணி

பரணி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் ஆயுத பிரயோகம், கதிர் அறுக்க, அடுப்பு வைக்க, தானியங்களை களஞ்சியத்தில் வைக்க, குளாம் மற்றும் கிணறு தோண்ட போன்ற காரியங்கள் செய்வதற்கு மிகவும் உகந்த நாட்களாகும்.

கிருத்திகை

கிருத்திகை ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் ஹோமம், சமையல், கடன் வழங்க, சுரங்கம் வெட்ட, சூளைக்கு நெருப்பு வைக்க போன்ற சுப காரியங்கள் சிறந்தவை.

ரோகிணி

ரோகிணி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் சீமந்தம், பெயர் சூட்டு விழா, விருந்துக்கள் சாப்பிட, கல்வி கற்க, கும்பாபிஷேகம், கிரகப்பிரவேசம், யாகம், நவக்கிரக சாந்தி, வியாபாரம், பதவி ஏற்க போன்ற சுப காரியங்களில் ஈடுபடலாம்.

மிருகசீர்ஷம்

மிருகசீர்ஷம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் சீமந்தம், காதுகுத்த, பதவி ஏற்க, தாணியம், மாடு, வாகனம் வாங்க, குளம், கிணறு வெட்ட, போன்றவை செய்யலாம்.

திருவாதிரை

திருவாதிரை ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் காதுகுத்த, சிவபூஜை செய்ய, குழந்தை தொட்டிலிட, பட்டாபிஷேகம் போன்ற சுபகாரியங்களை செய்ய மிகவும் ஏற்ற நாளாகும்.

புனர்பூசம்

புனர்பூசம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் சீமந்தம், புதுமனை விழா, வாஸ்து பூஜை, பதவி ஏற்க, காதுகுத்த, கல்வி கற்க, வாகனம் வாங்க, வெளிநாடு செல்ல போன்ற சுப காரியங்களை செய்ய உகந்தவை.

பூசம்

பூசம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் பதவி ஏற்க, சீமந்தம் மற்றும் வாஸ்து செய்ய, மாடு மற்றும் வாகனம் வாங்க, கிரகப்பிரவேசம், நகை அணிதல், வெளிநாடு செல்ல போன்ற சுபகாரியங்களை செய்யலாம்.

ஆயில்யம்

ஆயில்யம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் நவக்கிரக சாந்தி செய்தல், ஆயுதம் பயில, வாஸ்து பூஜை, கிணறு வெட்ட, திருமாங்கல்யம் செய்தல், மந்திரம் பிரயோகம் போன்ற பல சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மகம்

மகம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் திருமணம், பயிர் தொழில் செய்ய, வாகனம் மற்றும் ஆயுதம் கற்க, வாஸ்து பூஜை செய்ய, திருமாங்கல்யம் செய்ய போன்ற அனைத்து சுபகாரியங்களையும் செய்யலாம்.

பூரம்

பூரம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் கிரக சாந்தி செய்ய, சித்திரம் எழுத, மாடு வாங்க போன்ற சுப காரியங்கள செய்ய உகந்தவை.

உத்திரம்

உத்திரம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் பூமுடிக்க, சீமந்தம், திருமணம், அன்னபிரசன்னம், காதுகுத்தல், கல்வி கற்க, ஆபரணம் அணிதல், கிரகப்பிரவேசம், திருமாங்கல்யம் செய்ய, கடல் பிரயாணம் போன்ற பொதுவான சுப காரியங்களுக்கு உகந்தது.

ஹஸ்தம்

ஹஸ்தம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் சீமந்தம், பெயர்சூட்டுதல், திருமணம், குளம் மற்றும் கிணறு வெட்ட, கிரகப்பிரவேசம், ராஜதரிசனம், போன்ற சுப காரியங்களை செய்யலாம்.

சித்திரை

சித்திரை ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் புதுமனைபுகுதல், கல்வி கற்க, பதவி ஏற்க, திருமணம் செய்ய, கிரகப்பிரவேசம் மற்றும் வாஸ்து பூஜை போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.

சுவாதி

சுவாதி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் புதுமனைபுகுதல், கல்வி கற்க, பதவி ஏற்க, பயிர் தொழில் செய்ய, திருமணம், கிரகப்பிரவேசம் மற்றும் வாஸ்து பூஜை ஆகிய சுப காரியங்கள் செய்ய ஏற்றது.

விசாகம்

விசாகம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் கதிரறுக்க, கோடி வஸ்திரம் அணிய, கிணறு சரிசெய்ய போன்ற சுப காரியங்களை செய்ய மிகவும் உகந்தவை.

அனுஷம்

அனுஷம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் பூமுடிக்க, நாமகரணம், காதுகுத்த, ஆபரணம் அணிய, பதவி ஏற்க, வாகனம் ஓட்ட, கிரகப்பிரவேசம், திருமணம் செய்ய மிகவும் உகந்த நாள்.

கேட்டை

கேட்டை ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் மாடு வாங்க, மந்திரம் ஜெபிக்க, கடன் தீர்க்க, குளம் மற்றும் கிணறு வெட்ட என பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

மூலம்

மூலம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் நாமகரணம், திருமணம், சீமந்தம், விதை விதைக்க, கடன் தீர்க்க உகந்த நாளாகும்.

பூராடம்

பூராடம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் கணிதம் பயில, கடன் தீர்க்க, மாடு வாங்க என்று பொதுவாக சுப காரியங்கள் செய்ய உகந்தது.

உத்திராடம்

உத்திராடம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் சீமந்தம், திருமணம், காதுகுத்த, கிரகப்பிரவேசம், நெடுந்தூர யாத்திரை செய்ய, குழந்தை தொட்டிலிட போன்றவை செய்யலாம்.

திருவோணம்

திருவோணம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் ருதுசாந்தி, பூமுடிக்க, நாமகரணம், திருமணம், காதுகுத்த, கும்பாபிஷேகம், கடன்தீர்க்க மற்றும் பயிர் தொழில் செய்ய உகந்த நாளாகும்.

அவிட்டம்

அவிட்டம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் பூமுடிக்க, கல்வி கற்க, வெளிநாடு செல்ல, திருமாங்கல்யம் செய்ய போன்ற சுப கரியங்களை செய்யலாம்.

சதயம்

சதயம் ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் அன்னப்பிரசன்னம், பூமுடிக்க, கல்வி கற்க வெளிநாடு செல்ல, திருமாங்கல்யம் செய்ய போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.

பூரட்டாதி

பூரட்டாதி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் மந்திரம் ஜெபிக்க, சாந்தி செய்தல், சூளை பிரிக்க, குளம் மற்றும் கிணறு வெட்ட போன்றவை செய்யலாம்.

உத்திரட்டாதி

உத்திரட்டாதி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் சீமந்தம், பூமுடிக்க, ஆலயம் மற்றும் கோபுரம் தொடங்க, காதுகுத்த, கல்வி கற்க போன்ற சுப காரியங்களை செய்ய உகந்தது.

ரேவதி

ரேவதி ஜென்ம நட்சத்திரமாக உள்ளவர்கள் பூமுடிக்க, சீமந்தம், பெயர் சூட்ட, காதுகுத்த, திருமணம் செய்ய கோவில் கும்பாபிஷேகம் போன்ற சுப காரியங்கள் செய்ய மிகவும் உகந்த நாளாகும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்