அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி? பிரபல ஜோதிடர் கணிப்பு

Report Print Raju Raju in ஜோதிடம்
273Shares
273Shares
lankasrimarket.com

தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்களுக்கு குரு பெயர்ச்சியால் ஏற்படும் பலன்களை பிரபல ஜோதிடர் சிவ அண்ணாமலை தேசிகன் கணித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி:

எதிரிகளின் தயவில் இயங்குவதால், இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் புதை மணலில் மாட்டிக்கொண்ட யானையை போல் ஆகிவிடுவார்.

துணை முதல்வர் ஓ.பி.எஸ்:

2007 முதல் ராகு திசை நடைபெறுவதால், அவருக்கு மேல் பதவியில் உள்ளவரை காலி செய்து விட்டு அந்த இடத்தை இவர் ஆக்கிரமித்து விடுவார்.


மு.க ஸ்டாலின்:

குரு திசையில் கேது புத்தி நடைபெறுவதால் இவர் எடுக்கும் முயற்சியால் அவருக்கே கவுரவ குறைச்சல் ஏற்படும். எதையும் பல முறை யோசனை செய்து செயல்படுவது நலம் தரும்.


நடிகர் கமல்ஹாசன்:

இவரால் தனித்து செயல்பட முடியாது. ராகு, கேது, சனி நலமில்லை என்பதால், கடகம், விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுடன் கூட்டு வைப்பது பாதுகாப்பை தரும்.


நடிகர் ரஜினிகாந்த்:

நவம்பர் 29 வரை குரு, ராகு, கேது, சனி போன்றவை இவருக்கு யோக பலனை தரவுள்ளதால், அதற்குள் புதுகட்சி துவங்கினால் வெற்றியை யாரும் தடுக்க முடியாது. இவரது கட்சி 177 இடங்களில் வெற்றி பெறும்.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:

புதன் திசையில் செவ்வாய் புத்தி நடைபெறுவதாலும், குரு பெயர்ச்சி நலமில்லை என்பதாலும், உடல் ரீதியில் இவர் பாதிப்பை சந்திப்பார்.

- Dina Malar

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்