குருப்பெயர்ச்சியின் 5 யோகம்: எந்த ராசிகளுக்கு இல்லை?

Report Print Printha in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் குருப்பெயர்ச்சி இந்த ஆண்டில் ஆவணி மாதம் 17-ம் திகதி, ஆங்கில மாதத்தில் செப்டம்பர் 2-ல் அடைகின்றது.

கஜகேசரி யோகம்

சந்திர பகவானுக்கு குருபகவான் கேந்திர ஸ்தானங்களான 4,7,10 ஆம் இடங்களில் இருந்தால், கஜகேசரி யோகம் உண்டாகும்.

advertisement

இதனால் பணம், பகைவர்களை வெல்லும் பலம், புகழ் மற்றும் தீர்க்க ஆயுள் உண்டாகுவதுடன், தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

குருசந்திர யோகம்

சந்திர பகவான் குருபகவானுடன் சேர்ந்து5 அல்லது 9-ஆம் இடத்தில் இருந்தால், குருசந்திர யோகம் உண்டாகும்.

இதனால் உயர்ந்த தலைமை பதவி, எதிரிகள் இல்லா வாழ்க்கை, அதிக செல்வாக்கு போன்ற அதிர்ஷ்ட நன்மைகள் உண்டாகும்.

குருமங்கள யோகம்

மங்களன் எனும் செவ்வாய் பகவான் குருபகவானுக்கு கேந்திர ராசிகளான 1,4,7,10 ஆகிய இடங்களில் அமர்ந்தால், இந்த குருமங்கள யோகம் உண்டாகும்.

இதனால் நீண்ட ஆயுள், நிலையான செல்வம் மற்றும் சொத்துக்கள், புகழ் ஆகியவற்றின் சேர்க்கைகள் பெருகும்.

சிவராஜ யோகம்

குருபகவானின் ஆத்ம நண்பரான சூரிய பகவான் குருபகவானுடன் சேர்ந்து அல்லது சூரியன் குருவுக்கு நேர் பார்வையில் இருந்தால், சிவராஜ யோகம் உண்டாகும்.

இதனால் தந்தை நலம் சீராகும், அரசு பதவி கிட்டும், தலைமை அதிகாரி பதவி மற்ரும் ஆன்மீக சக்தி போன்றவை உண்டாகும்.

ஹம்ஸ யோகம்

பஞ்ச மஹா புருஷ யோகங்களின் ஒன்றான ஹம்ஸ யோகம், குருவின் ஆட்சி உச்சம் பெற்று லக்னத்தில் அல்லது சந்திரனின் கேந்திரங்களில் இருப்பதால் உண்டாகும்.

இதனால் மன வளம் அதிகரித்து, தன் வசப்படுத்தும் சக்தி மற்றும் அதிக செல்வம் ஆகியவை உண்டாகும்.

குருபெயர்ச்சி மூலம் நன்மை பெறும் ராசிகள்?
 • மேஷம்
 • மிதுனம்
 • கும்பம்
குருபெயர்ச்சி மூலம் தீமை மற்றும் நன்மை பெறும் ராசிகள்?
 • கடகம்
 • கன்னி
 • துலாம்
 • தனுசு
 • மகரம்
குருப்பெயர்ச்சியினால் பரிகாரம் செய்து பலன் பெறும் ராசிகள்?
 • ரிஷபம்
 • சிம்மம்
 • விருச்சிகம்
 • மீனம்

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்