"பார்த்தாலே பரவசம்" : உலகின் பிரம்மாண்டமான நட்சத்திர ஹொட்டல்

Report Print Maru Maru in கட்டுரை
0Shares
0Shares
lankasri.com
advertisement

அழகிய நிஜ மழைக்காடு, செயற்கையான தீவு, கடலுக்குள் ஹொட்டல் தளங்கள், விண்மீன்கள் நீந்தும் ஆகாய குளம்போல கூரை, இப்படி, இதுவரை உலகில் இல்லாத வகையில் ஒரு பிரம்மாண்டமான நட்சத்திர ஹொட்டல் துபாயில் திறக்கப்பட உள்ளது.

துபாய் ரோஸ்மண்ட் ஹொட்டல் மற்றும் ரெஸிடென்சஸ்(Resudency) என்ற பெயரில் திறக்கப்பட இருக்கும் இந்த ஹொட்டலின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து படங்களும் வெளியாகி இருக்கிறது.

advertisement

அதிபிரம்மாண்ட உருவாக்கமாக இருப்பதால், குறைவான மிச்ச பணிகளும் கலைநயத்தோடு முடிவதற்கு நாள் கடக்கும் என்பதால், 2018 ஆம் ஆண்டில் இது திறக்கப்பட இருக்கிறது.

ஒரு 5 அடுக்கு மாடி மேடை மீது அதன் நீளவாக்கின் இரு துருவங்களிலும் இரண்டு 47 மாடி கோபுரங்கள் அமைக்கப்பட்டிருப்பதுதான் இதன் வசீகர வெளித்தோற்றம்.

இந்த ஹொட்டல் பயன்பாட்டிற்கு வரும்போது, துபாய் நாட்டின் பிரதான ஹொட்டலாக இருப்பதுடன் உலக ஹொட்டல் வரலாற்றிலும் ஒரு திருப்பத்தை தரும் தர எல்லையாக அமையும்.

இந்த ஹொட்டலில் மழைக்காடுகளை உருவாக்கியிருப்பதுதான் மதிப்பான நிர்மாணப்பணி, வளைகுடா நாடுகள் என்றாலே வறட்சி, மணல் பாலை என்று ஏற்பட்டிருக்கும் கற்பனையை அகற்றுவது இதன் உன்னத உருவாக்க லட்சியம் எனலாம்.

ஹொட்டலின் கார் பார்க்கிங் பகுதியிலே அடர்ந்த பசுமை அனைவரையும் ஈர்க்க ஆரம்பிக்கிறது. அதுமட்டுமல்ல, மீன்கள் உட்பட்ட விதவிதமான கடல் உயிர்கள் அதன் நிஜமான நீர்ச்சூழலில் உலாவுகிறது.

அது கீழ்தளத்தில் இருப்பவர்களுக்கு தலைக்குமேல் தெளிவாக தெரியும்படி தளங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

மேலும், தங்கத்தால் செய்யப்பட்ட அறைகள், அழகான செயற்கை தீவுகள், நட்சத்திரங்கள் ஜொலிக்கும் இரவு வானத்தை சுருக்கி இறக்கி வைத்ததுபோல தளத்தின் கூரை. அதாவது, ஆடம்பரமான ஹொட்டலுக்குள் இருந்தாலும் ஆகாய வெளியின் சுதந்திரத்தை அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தோடு வருபவர்கள் தானே அதிகம். அதனால், குழந்தைகளை பொம்மைகளை தவிர வேறு என்ன பெரிதாக ஈர்த்துவிடும். ஹொட்டலின் தரத்திற்கு ஏற்ப பொம்மைகளும் தரத்தில் சிறப்பாகவே உள்ளன. பார்த்ததும் பெரியவர்களும் குழந்தையாகும் அளவிற்கு உள்ளது.

இங்கு வினோதமாக சிறுத்தையையே செல்லப்பிராணியாக வளர்ப்பதும் புதுமைதான்.

பணக்காரர்களுக்கான பார்க்கிங் பகுதியின் வலது புறத்தில் பெரிய திரை இருக்கிறது. அதில் இங்குள்ள கடல் மற்றும் காடுகளின் காட்சிகள் படமாக ஓடுகிறது.

மேல் தளத்தில் ஆடம்பரமான திரையரங்கம் உள்ளது. பொருள்களை கையாள்வதற்கு ரோபோ இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

உலக பிரபலமான ஹில்டனால் இந்த கட்டுமான திட்டங்கள் கையாளப்படுகிறது. 450 அறைகளைக் கொண்ட இந்த ஹொட்டல், இந்திய மதிப்புக்கு, 2007 கோடியே 34 லட்சத்து 35 ஆயிரத்து 74 ரூபாய் திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள படங்கள் ZAS கட்டட பணி நிறுவனத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.

advertisement

இந்த ஹொட்டலை அனுபவிக்க ஒரு ஏழையால் எப்படி முடியும். அதற்காக வருந்துவது பொருந்தாது. இதன் படங்களை பார்த்தும் படித்தும் இயன்றவரை அனுபவிப்பதும் ஒரு திருப்திதானே!

துபாயில் பிழைப்புக்காக சென்று கடின வேலைசெய்பவர்கள் நம் உறவினர்களிலும் ஊரை சார்ந்தவர்களிலும் நிச்சயமிருப்பார்கள்.

அவர்களிடம் துபாய் வேலையை பற்றி பேசினால், வேலை பளு மற்றும் சொந்தங்களின் பிரிவுகளால் ஒரு துன்ப விரக்தியில்தான் பேசுவார்கள்.

அப்படிப்பட்டவர்களுக்கும் ஒருநாள் இந்த ஹொட்டலுக்கு செல்லும் வாய்ப்பை அவர்கள் வருமானம் கொடுக்குமானால், நாம் எங்கோ வேலைசெய்யவில்லை பூமியின் சொர்க்கத்தையே தனது மடியில் வைத்திருக்கும் துபாயில்தான். நமக்கு கிடைத்த இந்த அனுபவிப்பு மற்ற நாட்டில் உள்ளவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லையே என்று மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வார்கள் நிச்சயம்.

images sourced from ZASArchitects.

மேலும் கட்டுரை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments