பல மில்லியன் கணக்குகளை முடக்கியது டுவிட்டர்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
26Shares
26Shares
lankasrimarket.com

சமூக வலைத்தளங்களில் தீங்கிழைக்கும் செயற்பாடுகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான கணக்குகள் தொடர்பில் சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.

இதன்படி டுவிட்டர் நிறுவனம் கடந்த இரு மாதங்களில் சுமார் 70 மில்லியன் கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இக் கணக்குகள் அனைத்தும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தவையாகும்.

கடந்த 2017 அக்டோபர் மாதத்தில் முடக்கிய கணக்குகளின் எண்ணிக்கையினை விடவும் தற்போது இரு மடங்கான கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்