இதோ வருகிறது வாட்ஸ் ஆப்பில் அதிரடி மாற்றம்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

வாட்ஸ் ஆப் அறிமுகமாகிய பின்னர் சில வருடங்களாக மற்றவர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க முடியாதவாறு காணப்பட்டது.

எனினும் கடந்த வருடத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட 420 செக்கன்களினுள் அச் செய்தியை அழிக்கக்கூடிய வசதி தரப்பட்டிருந்தது.

இவ் வசதியானது வாட்ஸ் ஆப் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளை அழிக்கக்கூடிய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 68 நிமிடங்கள் அல்லது 4096 செக்கன்களினுள் குறுஞ்செய்தியினை அழித்துவிட முடியும்.

இவ் வசதி தற்போது அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தும் வாட்ஸ் ஆப் செயலியில் மாத்திரமே தரப்பட்டுள்ளது.

விரைவில் iOS சாதனங்களிலும் இவ் வசதி கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறுஞ்செய்திகளாக அனுப்பப்டும் எழுத்துக்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் உட்பட மேலும் பலவற்றினை இவ்வாறு அழித்துக்கொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்