iOS 11 இயங்குதளத்தினால் பயனர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

எந்தவொரு மொபைல் சாதனங்களிலும் புதிய இயங்குதள பதிப்பினைப் பயன்படுத்தும்போது சில பிரச்சினைகள் தலைதூக்கவே செய்கின்றன.

அதேபோன்றே ஆப்பிள் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த iOS 11 இயங்குதளப் பதிப்பினை பயன்படுத்தும் பயனர்களுக்கும் புதிய தலைவலி ஒன்று ஆரம்பித்துள்ளது.

அதாவது இவ் இயங்குதளங்களில் செயற்படும் iPhone மற்றும் iPad என்பவற்றில் கூகுளின் அப்பிளிக்கேஷனான யூடியூப்பினை பயன்படுத்தும்போது மின்கலத்தின் சார்ஜ் வெகுவாக குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

யூடியூப் அப்பிளிக்கேஷனை சுமார் 15 நிமிடங்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தும்போது 20 சதவீதம்வரை மின்கலத்தின் சார்ஜ் குறைவடைகின்றது.

இது தொடர்பில் பல பயனர்கள் ரிப்போர்ட் செய்துள்ளனர்.

அத்துடன் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தும்போது மொபைல் சாதனங்கள் வெப்பமடைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்